Categories
சேலம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீரின் அளவு குறைந்து வந்தது. இந்நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில்  வினாடிக்கு 3 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து இருக்கிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 6 ஆயிரம் 603  கன அடிதண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில். இன்று நீர்வரத்து8,343 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதமும்.

மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 250 கனஅடி வீதமும்  திறந்துவிடப்படுகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 96.55 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 96.64 அடியாக உயர்ந்துள்ளது.

Categories

Tech |