இத்தாலிக்கு மெக்சிகோவிலிருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலிக்கு மெக்சிகோவிலிருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் தற்போது மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சகம் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பழங்கால பொருட்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
அதேசமயம் மெக்சிகோவிற்கு இரண்டு தனித்தனி மனித முகங்கள் கொண்ட செராமிக் பொருள்கள் மற்றும் இரண்டு மனித உருவங்கள் பொறித்த களிமண் பானை உள்ளிட்டவை மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்தாலி மெக்ஸிகோவிற்கு 650 பழங்கால மற்றும் மத பொருட்களை 2013-ஆம் ஆண்டு முதல் திருப்பி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.