Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2,146 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு… வேகமா உயர்ந்துவிடும்… மழையினால் ஏற்பட்ட பயன்..!!

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் மழையின் காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 2,146 கன அடியாக உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடிக்கு கீழ் குறைந்து  400 கன அடிக்கு கீழ் சென்றுள்ளது.

இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் திடீரென நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 2, 146 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 97.67 அடியிலிருந்து 97.74 அடியாக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

Categories

Tech |