டெல்லியில் மெட்ரோ ரயில்கள் தற்போது அனைத்து இடங்களிலும் இயங்க ஆரம்பித்துவிட்டது.
நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்பொழுது வரை பொது முடக்கம் என்பது அமலில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப் போக்குவரத்து, மற்றும் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பரவலால் மார்ச் 22 முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் முதன்முறையாகக் சென்ற திங்கட்கிழமை அன்று மஞ்சள் தடத்தில் வழக்கத்தைவிடக் குறைவான எண்ணிக்கையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது கொரோனா சூழலுக்கு முன்பு இருந்ததைப் போல் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான கால அட்டவணையும் இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.