Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்…. ரயில்ல பொம்மலாட்டமா….? சென்னையில் பரபரப்பு…!!

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மெட்ரோ ரயில்களில் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கின்றனர். இதனையடுத்து வருகிற 22-ஆம் தேதி அகரம் கலைக்குழுவுடன் மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து மாலை 7 மணி முதல் 7:5௦ மணி வரை, விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நாடகமானது நடைபெற உள்ளது.

அதன் பின் வருகின்ற 25ஆம் தேதி விமான நிலையம் மெட்ரோவில் இருந்து சென்ட்ரல் மெட்ரோ வழியாக செல்லும் மெட்ரோ ரயிலிலும், வண்ணாரப்பேட்டை மெட்ரோவில் இருந்து விமான நிலையம் மெட்ரோ செல்லும் ரயிலிலும் காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறும்போது, மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |