Categories
உலக செய்திகள்

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்…. அதிரடி கைது செய்த போலீசார்….!!!

நியூயார்க்கில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில்  நேற்று முன்தினம் நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில்  துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில்  3 பெண்கள், 7 ஆண்கள் என 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தினால் நெரிசலில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து  இந்த விபத்தினால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த துப்பாக்கி சூடு நடத்தியதன் காரணம் என்ன என்பது குறித்த விபரங்கள் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் நியூயார்க் காவல்துறை கமிஷனர் புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில்  துப்பாக்கி சூடு நடத்திய நபர் பிராங்க் ஜேம்ஸ் (62) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |