கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கள்ளிபுரம் பகுதியில் பழனிசாமி என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த பழனிசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனிசாமிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பென்னாகரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.