Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…ஒற்றுமை பலப்படும்…பிரச்சனைகள் அகலும்…!

மேஷ ராசி அன்பர்களே …!  இன்று சகோதர ஒற்றுமை பலப்படும் நாளாக இருக்கும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட குளறுபடிகள் அகலும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில் வளர்ச்சியும் சிறப்பாகவே இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடிவரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.

தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து புதிய பங்குதாரர்கள் வருவார்கள். அரசு ஊழியர்களின் வேலை பளு குறையும். எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களும் முன்னேற்றமே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் மனம் கொஞ்சம் அமைதியாகவே காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இள மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |