மேஷ ராசி அன்பர்களே …! இன்று தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறையும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றங்கள் உங்களுக்கு உறுதியை கொடுக்கும். எடுத்த காரியத்தை சாதகமாகவே செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம்.
நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். எந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுதும் எச்சரிக்கை உடனே செய்யுங்கள் காரியத்தில் ஓரளவு அனுகூலம் உண்டாகும் மன குழப்பம் நீங்கும் இருந்தாலும் தேவையில்லாத விஷயத்தைப் பற்றி யாரிடமும் உரையாடிக் கொண்டு இருக்காமல் பொறுமையாக இருங்கள்.
இன்று காதலர் நிதானத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களுக்கும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.