மேற்குவங்காளத்தில் தடையை மீறி பேரணி சென்ற போது போலீசாருடன் பாரதிய ஜனதா கட்சியினர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகம் நடப்பதாகவும் குறிப்பாக பாரதிய ஜனதாவினர் கொல்ல படுவதாகும் அக்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை கண்டித்து ஹௌராவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி கண்டனப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பாரதிய ஜனதாவினர் பேரணியை தடுப்பதற்காக தலைமை செயலகம் நோக்கி வரும் சாலைகளை போலீசார் பாரிகார்டு வைத்து அடைத்தனர். ஆனால் தடையை மீறி அறிவித்தபடி நேற்று கொல்கத்தாவில் ஹாஸ்டிங் பகுதியில் இருந்தும் ஹவுராவின் சென்டாக் கட்சி பகுதிகளில் இருந்தும் பாரதிய ஜனதாவினர் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
போலீசாரின் பாரிகாட் தடுப்புகளை மீறி முன்னேறி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் உண்டானது.