இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சஃபா பாயிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்தத் தம்பதிக்கு அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இர்பான் கான் என பெயரிடப்பட்டது .
இந்தநிலையில் அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமுற்றார். அவருக்கு தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது .இந்தக் குழந்தைக்கு சுலைமான் கான் என பெயரிடப்பட்டுள்ளது .இந்நிலையில் குழந்தையை கையில் ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை இர்பான் கான் பகிர்ந்துள்ளார். அதோடு குழந்தையும், மனைவியும் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.