தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்க அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அமெரிக்க நேட்டோ படை வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேருகின்றனர் .
இந்த ஒப்பந்தத்தின் படி வெளிநாட்டுப் படை வீரர்களின் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறையை குறைத்துக் கொள்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் ஒப்பந்தத்தில் உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதற்கு மாறாக கடந்த சில வாரங்களாகவே தீவிரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆப்கனிஸ்தான் நாட்டில் 10-ல் மூன்று பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான் தீவிரவாதிகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தாக்குதல் நடத்தி பகுதிகளில் கைப்பற்றி வருகின்றனர்.
இதில் குறிப்பாக தஜிகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள படாக்ஸ்கான், தக்கார் ஆகிய இடங்களை தீவிரவாதிகள் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ வீரர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள தஜிகிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தஜிகிஸ்தான் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு எல்லை பாதுகாப்பு காவல்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர் .