Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மீண்டும் களமிறங்கிய சேட்டை மன்னன் ஜார்வோ” ….! வைரலான வீடியோ ….!!!

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும்  மீண்டும் ஜார்வோ மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது . 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் ஆட்டத்தின்போது ஜார்வோ என்ற நபர் மைதானத்துக்குள் நுழைந்து சேட்டை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் .இதற்கு முன்பு நடந்த டெஸ்ட் போட்டியிலும்  திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தினார் .

இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது, இந்திய அணி ஜெர்சி அணிந்து கொண்டு திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்த ஜார்வோ பந்துவீச முயன்றுள்ளார். இதனால் ஆட்டத்தில் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது .இதனைக் கண்ட மைதான ஊழியர்கள்அவரை குண்டுக்கட்டாக மைதானத்தில் இருந்து வெளியேறினர் .தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவுகிறது.

Categories

Tech |