Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் தனுஷ்-ஹன்சிகா…. ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்….!!


‘மஹா’ படத்தில் நடித்து வரும் ஹன்சிகா இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது.

அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள “மஹா” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் இவருடைய 50 வது படம். இப்படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார்.

இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் அதில் ஒருவராக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான “மாப்பிள்ளை” படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஏற்கனவே ஹன்சிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |