நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வெட்டியரசம்பாளையம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரது வீட்டில் கடந்து 8 ஆம் தேதி அவரையும் மனைவி பழனியம்மாவையும் கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த ரூ.28 லட்சம் ரொக்கம், 18 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் படி 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். மல்லூர் சோதனை சாவடியில் போலீசார் வாகனம் தணிக்கை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் காரில் வந்த மருமநபர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை சேர்ந்த பெரிய மருது, சரவணன், ரஞ்சித், ராஜேஷ், ஜெகதீஷ், மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சோமசுந்தரம், திருச்சி சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 7 பேர் இருந்தது தெரியவந்தது. இவர்கள் தான் மணி வீட்டில் கொள்ளை அடித்தவர்கள் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனார்.
அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. ஜவுளி உற்பத்தியாளர் மணி ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருந்து உள்ளார். இந்நிலையில் அவரது கார் ஓட்டுனர் ராமராஜன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் ஜவுளி உற்பத்தியாளர் மணிக்கு அறிமுகமானார். அந்த சாமியார் கடன் பிரச்சனையை பூஜை நடத்தி சரி செய்வதாகும். திருநீர் பூஜை செய்தால் பணமழை கொட்டும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் பண மழை பெய்வதும், எலுமிச்சை பழம் தானாக மேலே வருவதும் போன்ற வீடியோக்களை காட்டி நம்ப வைத்துள்ளனர். அதற்காக கடந்த 8 ஆம் தேதி மணியின் வீட்டில் சாமியார் மற்றும் எட்டு பேருடன் பூஜை நடத்தப்பட்டது. மணியை வசியம் செய்து மயக்கம் அடைய வைக்க சாமியார் முயற்சித்தார். ஆனால் மயக்கம் அடையாதால் மணி மற்றும் அவரது மனைவி பழனியம்மாவையும் தாக்கி கட்டிப்போட்டு, ஓட்டுனர் ராமராஜன் மூலம் வீட்டில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த கும்பல் முதலில் வீட்டில் பூஜைகள் செய்த புதையல் எடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.6,02,500, அவர்கள் தப்பி செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.