கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் யஷ். இவர் கேஜிஎப் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் உலக அளவில் 1250 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியால் நடிகர் யஷ்ஷின் அடுத்த பட அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஆந்திர பிரதேச சட்ட மேலவை உறுப்பினரான நாரா லோகேஷ் ராஜ் என்பவரை வெஸ்டின் ஹோட்டலில் வைத்து நடிகர் யஷ் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்த நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் யஷ் அரசியலில் ஈடுபட போகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் நடிகர் யஷ்ஷின் நெருங்கிய வட்டாரங்கள் வலைதளங்களில் நடிகர் யஷ் அரசியலில் ஈடுபட மாட்டார் என்று கூறி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான விளக்கத்தை நடிகர் யஷ் விரைவில் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.