காணொலி வாயிலாக நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 17 மனுதாரர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து மொத்தம் 17 மனுதாரர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி பொதுமக்களுக்கு தேவையான கல்வி உதவிதொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வங்கி கடன் உதவி, இலவச வீட்டு மனை பட்டா, குடிசை மாற்று வாரிய வீடு, வாரிசு சான்றிதல், பட்டா மாறுதல், சாலை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பு கொண்டு அதற்கு தீர்வு வழங்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேலு என அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.