Categories
சினிமா தமிழ் சினிமா

கற்பழிப்பு மிரட்டல்….. எனக்கு ஏதாச்சும் ஆனா சூர்யா தான் பொறுப்பு…. மீரா மிதுன் சர்ச்சை கருத்து…!!

எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சூர்யா தான் காரணம் என மீராமிதுன் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் பிரபலம் என அழைக்கப்படும் மீரா மிதுன் பிக்பாஸில் இருக்கும்போதே பல சர்ச்சைகளை கிளப்பி தமிழகத்தில் வைரலானவர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்பும் பல சர்ச்சை செயல்களில் ஈடுபடுவதாக சமூக வலைதள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில்,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் வீடியோக்களை பதிவிடுவார். அதில் ஏதேனும் ஒரு சர்ச்சை கருத்துக்களை அவரை பாலோ  செய்பவர்கள் கண்டுபிடித்து அதனை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருவார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில்,

நடிகர் சூர்யாவுக்கு நடிக்க தெரியாது எனவும், ஒரு காட்சி நடிப்பதற்கு 20 டேக் எடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு சூர்யா ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீராமிதுன் இது குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

சூர்யா குறித்து நான் பேசியதால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து எனது மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தன்னை மிரட்டுவதாகவும், குறிப்பாக கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல் அதிகம் வருவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை போனில் மிரட்டுவது சூர்யா ரசிகர்கள் என்பதால், எனக்கு ஏதாவது நேர்ந்தால் சூர்யாதான் அதற்க்கு முழு பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்தும்  தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |