Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பாலாவுடன் இணைந்த சிவானி… வைரலாகும் பிரெண்ட்ஷிப் பதிவு…!!!

பிக்பாஸ் பிரபலம் சிவானி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரெண்ட்ஷிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமடைந்த சிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட சிவானி பாலாஜியுடன் நெருக்கமாக இருந்ததால் தனது தனித்தன்மையை இழந்ததாக விமர்சனம் செய்யப்பட்டார் . இருப்பினும் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி சிங்கப் பெண்ணாக வெளியேறினார் . ஆனால் இதன் பின் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த போது பாலாஜியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

இதன் பின்னர் ஷிவானி பாலாஜியை சந்தித்தாரா? இருவரும் தங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டார்களா என்பது குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது . இந்நிலையில் ஷிவானி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘பிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு’ என்று பதிவிட்டுள்ளார் .மேலும் அந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் ,சம்யுக்தா, ஆஜித் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் சிவானி மீண்டும் பாலாஜியுடன் தனது நட்பை புதுப்பித்துக் கொண்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .

Categories

Tech |