நடிகை வாணி போஜன் மீண்டும் அசோக்செல்வனுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை வாணி போஜன் . இதையடுத்து இவர் கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இந்தப் படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்திருந்தார் . இந்த படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்திய வாணி போஜனுக்கு பாராட்டுகள் கிடைத்ததோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தது .
இந்நிலையில் நடிகை வாணி போஜன் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . அறிமுக இயக்குனர் வெங்கட் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது . இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .