மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழவைப்பார் கிராமத்தில் ஜெபமாலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்டன் மதுபோதையில் தனது மனைவியிடம் ‘மீன்பிடிக்கச் செல்ல மாட்டேன்’ என தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற செல்டன் நீண்ட நேரமாகியும் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில் ஊருக்கு அருகேயுள்ள வேலிகாட்டில் உள்ள ஒரு மரத்தில் செல்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த செல்டனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்டனின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த குளத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.