Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! வாக்குறுதிகள் வேண்டாம்….! நிம்மதி கிடைக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! செல்வத்தையும் செல்வாக்கையும் உயர்த்திக்கொள்ள முடியும்.

இன்று எதிரிகளின் தொல்லை இருக்காது. எந்த ஒரு பிரச்சனையையும் நீங்கள் தவிடுபொடியாக்கி விடுவீர்கள். உங்களுடைய முன்னேற்றத்தைக் கண்டு உறவினர்கள் ஆதங்கப்படுவார்கள். அன்பான பேச்சுக்களால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் ஏற்படும். பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறைந்து மனநிம்மதி உண்டாகும். அலைச்சல் டென்ஷன் எல்லாம் மறைந்து விடும். முன்னோர் சொத்துக்கள் கையில் வருவதற்கான சூழல் உருவாகும். லாபங்கள் கூடும். வீடு, மனை, வண்டி வாங்க கூடிய யோகமான சூழ்நிலை இருக்கும். வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். செல்வத்தையும் செல்வாக்கையும் உயர்த்திக்கொள்ள முடியும். வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்.

வாழ்க்கையில் உயர்ந்த எண்ணங்களும் நல்ல சிந்தனையும் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கடந்த கால பிரச்சனைகள் எல்லாம் குறைந்து நிம்மதி ஏற்படும். எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். முடிவுகளை எடுக்கும்போது தீர்க்கமாக யோசித்து எடுக்க வேண்டும். காதலின் நிலைபாடுகள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். காதல் கண்டிப்பாக கைகூடும். மாணவர்கள் எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். அரசாங்க தேர்வு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் நல்ல முறையில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் 

Categories

Tech |