Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! திறமை வெளிப்படும்….! துணிச்சல் பிறக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

இன்று கண்டிப்பாக குரு வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ளும் நாளாக இருக்கும். ஆலய வழிபாடுகள் கூட மனதிற்குள் நிம்மதியை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் இன்று காலையிலேயே உங்கள் வாயில் கதவைத் தட்டும். நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். துணிச்சலை வளர்த்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வதற்கான அறிகுறிகள் இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சில காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மற்றவரிடம் ஆலோசனை கேட்கும் போது கொஞ்சம் பொறுமையாக நிதானமாக கேட்க வேண்டும். பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. சொந்த அறிவில் செயல்படவேண்டும். புத்திக் கூர்மையில் மாற்றங்கள் இருக்கும். வாழ்க்கை தேவை பூர்த்தியாகும். வாழ்க்கையில் சில மாற்றங்களை எடுத்துக் கொள்வீர்கள். தொழிலில் நீங்கள் தொழில்நுட்பத்தைப் புகுத்தி பணம் சம்பாதிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். ஆதாய பணவரவு இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்களும் இருக்கும். சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கக் கூடிய ஆற்றலும் இருக்கும். பிரச்சினைகள் எல்லாம் பெரிதாக இல்லை. பெண்களுக்கு சுய மரியாதை அதிகரிக்கும். சிறப்பாக செயல்படுவீர்கள். பெண்களுக்கு உற்சாகத்திற்கு குறைவில்லை. உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களால் இயங்க முடியும். சில முடிவுகளில் தெளிவாக இருக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன மனவருத்தங்கள் ஓடிக்கொண்டிருக்கும். குழப்பங்களை நீங்கள்தான் சரிசெய்து கொள்ள வேண்டும். இன்று மாணவர்களுக்குப் ஞாபகமறதி இருக்கும். மாணவர்கள் செய்யக் கூடிய காரியங்களில் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்பொழுது தான் வெற்றி நிச்சயம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் வெள்ளை

Categories

Tech |