மீனம் ராசி அன்பர்களே.! வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இருக்கின்றது.
இன்று கண்டிப்பாக தாயின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். தாயிடம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துணிவுடன் செயல்பட்டு காரியங்களையும் முன்னேற்றகரமாக செய்து முடிப்பீர்கள். எடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும். உடல் கொஞ்சம் ஓய்வு இல்லாமல் இருக்கும். கவன சிதறல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எச்சரிக்கை எப்பொழுதும் விட்டுவிடக்கூடாது. படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி செல்ல கூடியவர்களாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கான தகவல் சிறப்பாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களை விமர்சித்தாலும் அனுசரித்துப் போக வேண்டும்.
மற்றவர்கள் உங்களை கேலி கிண்டல் பேசினாலும் அதனை பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களால் சாதிக்க முடியும். பெரிய அளவில் முன்னேற முடியும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் என்று இருக்கின்றது. வருமானத்தை உயர்த்த கூடிய திட்டங்கள் இருக்கின்றது. நிதி நிலைமை சரி செய்ய கூடிய ஆற்றல் இருக்கின்றது. பெரிய அளவில் வளர்ச்சி இருக்கும். எல்லாவிதமான நன்மையும் இருக்கும். மனதை காயப்படுத்திய காதல் இப்பொழுது படிப்படியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும். கண்டிப்பாக காதல் வெற்றியை ஏற்படுத்தும். தைரியமாக நீங்கள் இருக்கலாம். மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை நன்றாக படிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த எல்லாவிதமான முயற்சியையும் மேற்கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு