மீனம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் சின்ன சின்ன கஷ்டங்களுக்கு முடிவு கட்டுவீர்கள்.
இன்று செய்யக்கூடிய பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சிறப்பாக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். சில நபர்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி ஏமாற்ற நேரிடும். அதில் உள்ள சாராம்சத்தை புரிந்து ஆராய்வது நல்லது. புத்திரர் விரும்பிய பொருளை வாங்கி கொடுப்பீர்கள். முகத்தில் மகிழ்ச்சியும் கண்டிப்பாக இருக்கும். எதிர்பாராத நன்மை உண்டாகும். எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஆகும். எதிர்பாராத திடீர் செலவுகளும் வீண் அலைச்சலும் உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. மனதில் குழப்பம் இருக்கும். முடிவுகள் எடுக்கும் போது தைரியமாகவும் சரியாகவும் தெளிவாகவும் எடுக்க வேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன கஷ்டங்களுக்கு முடிவு கட்டுவீர்கள்.
குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ அதனை வாங்கிக் கொடுப்பீர்கள். காதல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். நிம்மதியே ஏற்படுத்தித்தரும். காதலில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மாணவர்களுக்கு எல்லாவிதமான கஷ்டங்களும் சரியாகும். பள்ளி கல்வி மீது அக்கறை ஏற்படும். இதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். சிந்தனையில் சில மாற்றம் இருக்கும். மனதிற்குள் ஏதோ நெருடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்துவர கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்