மீனம் ராசி அன்பர்களே.! சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
இன்று எல்லாவற்றிலும் எல்லோரையும் சந்தேகப் பார்வையோடு பார்க்கக்கூடிய குணம் இருக்கின்றது. அதனை மட்டும் நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். அதனை சந்தோஷமாக மாற்ற வேண்டும். வாழ்க்கை முறையை சரி செய்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பயந்த சிந்தனையை குறைத்துக் கொள்ள வேண்டும். உறவினரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உறவினரின் வருகை இருக்கின்றது. அதனால் செல்லவும் கூடும். திருமணம் தொடர்பான பேச்சுக்களில் சாதகமான சூழல் இருக்கும். சில நேரத்தில் ஏற்படக்கூடிய மனவருத்தங்கள் குழப்பத்தை அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதற்கும் முயற்சி செய்ய வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
செல்வமும் செல்வாக்கும் இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. மாணவர்கள் மனதை தைரியமாக வைத்துக் கொண்டு எதிலும் ஈடுபட வேண்டும். கல்விக்கான நேரம் ஒதுக்க வேண்டும். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி சாதனை படைக்க வேண்டும். காதல் கசக்கும். தேவையில்லாத சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சூழல் உருவாகும். காதலர்கள் பொறுமையாக இருந்து விட்டு கொடுத்து சென்றால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பின்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு