மீன ராசி அன்பர்களே…! இன்று தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்கள் வழியில் அன்பு தொல்லைகளை சந்திக்க நேரலாம். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு மரியாதையும் கிடைக்கும்.
எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது ரொம்ப நல்லது. பண விஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரின் நம்புவதை தவிர்க்க வேண்டும். நிதி மேலாண்மையில் கண்டிப்பாக கவனம் வேண்டும். செய்தொழில் கூட சில மாற்றங்கள் இன்று நிகழும். தன வரவு தாராளமாக இருப்பதால் சேமிப்பதற்கு கண்டிப்பாக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள்.
காதலர்கள் இன்று கண்டிப்பாக கொஞ்சம் பொருமை கொள்ள வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.