Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…வளர்ச்சி அதிகரிக்கும்…நிதானம் தேவை…!

மீன ராசி அன்பர்களே…!       இன்று உங்களுடைய நல்ல செயலுக்கான பலனை கண்டிப்பாக தேடி வரும் தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் நேரமாக பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு வந்து சேரும். பணம் கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். தொழில் வியாபாரம் மெத்தனமாகவே இருக்கும். எதை பற்றியும்  கவலை கொள்ளாதீர்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் சிறப்பை கொடுக்கும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதலாகவே கவனத்தையும் செலுத்துங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர் வகையில் ஆதரவுகள் இருந்தாலும் செலவை மட்டும் கட்டுப்படுத்த முடியாது  தயவுசெய்து செலவை மற்றும் கட்டுப்படுத்துங்கள். பிள்ளைகளுக்கு தேவையானதை மட்டும் வாங்கி கொடுங்கள். அதேபோல தேவையில்லாத பொருட்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். கூடுமானவரை பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் மதியத்திற்கு மேல் எல்லாமே சரியாகிவிடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |