Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… கவனம் தேவை… இவர்களின் கருத்தை மறுக்க வேண்டாம்…!!

மீன ராசி அன்பர்களே…!! இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முடிவுகள் எடுக்கும் பொழுது தீர ஆலோசித்து விட்டு எடுப்பது நல்லது. மனைவியிடம் ஆலோசனை கேட்டு எந்த காரியத்தையும் செய்யுங்கள். பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும். தயவுசெய்து அந்த ஆலோசனையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் உரையாடும்போது கவனமாகவே இருங்கள். எச்சரிக்கையாக செயல்படுங்கள். வேலை செய்யும் இடத்தில் நெருப்பு மற்றும் ஆயுதங்கள் இடம் இருந்து விலகி இருப்பது நல்லது.இன்று கூடுமானவரை கவனமாக இருந்தால் அனைத்தும் சரியாகிவிடும்.

கல்யாண கனவுகள் ஓரளவு நனவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாட்களால்  ஏற்பட்ட தொல்லை அகலும். இன்று  சிக்கலான காரியத்தை கூட சீக்கிரமாக முடித்துக் காட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது.  பேச்சில் நிதானத்தை கொஞ்சம் கடைபிடியுங்கள். தேவையற்ற விஷயங்களில் உரையாடிக் கொண்டே இருக்காமல் வேலையை மட்டும் செய்வது ரொம்ப நல்லது.

இன்று காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானம் இருக்க வேண்டும். கணவன்-மனைவி இடையே பூசல்கள் வந்தாலும் அமைதியாக பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமன்றி இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு உணவாக  கொடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை:  வடமேற்கு

அதிர்ஷ்ட எண்:  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

 

Categories

Tech |