இலங்கையில் இருக்கும் மருத்துவமனைகளில் வரும் நாட்களில் அவசரகால சிகிச்சை வழங்குவதற்கு கூட உரிய மருந்து பொருட்களின்றி அவதிப்படும் நிலை உண்டாகும் என்று தேசிய மருத்துவ கழகம் எச்சரித்திருக்கிறது.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் தகுந்த அளவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவுக்கு நாட்டின் மருத்துவ கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மருத்துவமனைகளில் தகுந்த மருந்துகளின்றி, ஏற்கனவே வழக்கமாக நடக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் உடனே மருந்து பொருட்களின் விநியோகம் சரி செய்யப்படாவிடில் வரும் நாட்களில் அவசரகால சிகிச்சைகளும் வழங்கப்பட முடியாத நிலை உண்டாகும். எனவே அதிக ஆபத்து உண்டாகி உயிர்ப்பலிகள் ஏற்படும் என்று கூறப்பட்டிருக்கிறது