Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அசந்த நேரத்தில்… மருந்து கடையில் திருட்டு… கல் தடுக்கியதால் சிக்கிய வாலிபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்து கடையில் திருடிய வாலிபனை போலீசார் கைது செய்தனர்

பாண்டியம்மாள் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வசந்த நகர் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடைக்கு வெளியே ஒருவரை பார்ப்பதற்காக கல்லாவை பூட்டி விட்டு கடையிலிருந்து சென்றிருக்கிறார். இவர் வெளியில் செல்வதை அருகில் இருந்து நோட்டமிட்ட 2 வாலிபர்கள் கடைக்குள் சென்று கல்லாவை திறந்து அதில் இருக்கும் 1100 ரூ பணத்தை எடுத்து கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

பாண்டியம்மாள் கடையிலிருந்து வெளியே வருபவர்களை கவனித்து கூச்சலிட்டார். இந்நிலையில் தப்பி ஓடிய நபர் கல் தடுக்கி கீழே விழுந்து விட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிடிபட்ட நபரிடம் இருந்து கைப்பற்றிய பணத்தை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |