Categories
தர்மபுரி திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ சீட்டு வாங்கி தருகிறேன்… குடும்பத்தோடு மோசடியில் ஈடுபட்டவர்… திருப்பத்தூரில் பரபரப்பு…!!

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ருபாய் 27 லட்சத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் வரதராஜன்-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். இவர் மருத்துவ படிப்பில் சேர பலமுறை முயற்சித்தும் அதில் சேர முடியவில்லை. இதற்கிடையில் திருப்பத்தூரில் வசித்து வரும் ஹோமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள நூருல்ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது தனது மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைக்காததைப் பற்றி புஷ்பவல்லி அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் தனக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்றும், ரூபாய் 27 லட்சம் பணம் கொடுத்தால் மருத்துவ சீட்டு வாங்கி தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறியதை நம்பிய புஷ்பவல்லி திருப்பத்தூருக்கு சென்று ரவிச்சந்திரன், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ரவிச்சந்திரனின் மனைவி நதியா மற்றும் அவருடைய மைத்துனர் வெங்கடேசன் ஆகிய மூவரிடமும் ரூபாய் 27  லட்சத்தை  கொடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகு ரவிச்சந்திரன் மருத்துவ சீட்டையும் வாங்கி கொடுக்கவில்லை. அதோடு புஷ்பவள்ளியிடம் வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட புஷ்பவள்ளி புகார் அளித்தார்.

இதனையடுத்து டிஎஸ்பி பிரவீன்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். அந்த விசாரணையில் டாக்டர் ரவிச்சந்திரன் அவருடைய மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோரின் உதவியோடு ரூபாய் 27  லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் வேங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ27 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |