தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்.
நாகப்பட்டினம், ராமநாதபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் போன்ற மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது, “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி” என்னும் திட்டத்தில், மத்திய அரசு அளிக்கும் நிதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எனினும் தமிழ்நாட்டில் திமுக, எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்த சமயங்களில், திமுகவினர் அவரை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொள்வது மற்றும் டிவிட்டர் ஹேஸ்டேக்-ஐ ட்ரெண்ட் செய்வதுமாக இருப்பார்கள்.
தற்போது திமுகவின் ஆட்சியில் பிரதமர் வருவதால், அவரை திமுகவினர் வரவேற்பது தொடர்பில் பலவிதமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், கனிமொழி எம்பி, மாநில அரசின் திட்டங்களை தொடங்குவதற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பது நம் கடமை, எதிர்மறையான கருத்துக்கள் இருக்கும்.
எனினும் அடிப்படையில் ஒரு அரசு, ஒரு அரசிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மக்களுக்கான நல்லது எது? என்று கவனமாக இருக்க வேண்டும். மக்களை எதிர்க்கும் திட்டங்களுக்கு திமுக அரசு எப்போதும் ஆதரவு கொடுக்காது என்று கூறியிருக்கிறார்.