Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மேய்ச்சலுக்காக சென்ற மாடு…. மர்மபொருளை கடிதத்தில் விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மர்மபொருள் வெடித்து பசுமாட்டின் வாய் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னசேக்கனூர் பகுதியில் தாதா என்ற விவசாயி வசித்து வருகின்றார். இந்நிலையில் தாதா தனக்கு சொந்தமான பசுமாட்டை எப்போதும்போல் கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது மாடு அங்கு கிடந்த மர்மபொருள் மீது வாய் வைத்ததால் அந்தப் பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் மாட்டின் தாடைப் பகுதி முழுவதும் கிழிந்து பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து தாதா அரியூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அந்த தகவலின்படி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடை மருத்துவர் ராஜவேலு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது, வெடித்த பொருள் நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என கருதபடுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சில தடயங்களை காவல்துறையினர் சேகரித்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |