73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 73வது சுதந்திர தின விழாவில் பேசிய போது இந்தியா பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக மாறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அதற்கு இணையான பலத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் ராணுவ பலத்தை கூட்ட வேண்டும் என்ற அவருடைய பேச்சு வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தாக்குதல் நடந்துவருகின்றது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 19 நாளில் பாதுகாப்பு வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். ஆனால் 12 நாட்களிலேயே இந்தியா விமானப்படை,பாகிஸ்தான் பகுதியில் குண்டு மழை பொழிந்தது.அதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. அதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றில் இந்தியா உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.