தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவ படிப்பை தேர்வு செய்து படித்து வந்தனர். இதன்பின் 7.5% உள் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழி கல்வி படித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு முதல் வருடத்தில் ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் பாடங்களை படிக்க சிரமமாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு MBBS பாடப் புத்தகங்களை புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக 4 புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.