மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி என் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகிறது.நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இது ஆறாவது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 32ஆக இருந்த மாவட்டத்தில் எண்ணிக்கையை 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.