திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தளபதி ஸ்டாலின் தொண்டனின் தொண்டனாக… மிகப்பெரிய இயக்கத்தின் தலைவருடைய மகனாக இருக்கலாம். ஆனால் அவர் என்னைக்கும் அப்படி பார்த்ததே கிடையாது.
முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த பிறகு, ஒரு இரங்கல் பாட்டு பாடு போதும் சொன்னார், இத்தனை ஆண்டு காலம் உங்களை தலைவரை, தலைவரே என்று அழைத்து விட்டேன், ஒருமுறை உங்களை அப்பா என்று அழைக்கட்டுமா ? என்று கேட்க கூடிய அளவிற்கு… ஒரு தலைவனுக்கும், தொண்டருக்கும் இருக்கக்கூடிய உறவு தான் அவருக்குள் இருந்ததே தவிர, அப்பா – பிள்ளை என்ற உறவு எல்லாம் இல்லை. ஏனென்றால் கலைஞரும் அப்படித்தான் இருப்பார்.
கலைஞருமே இந்த சமுதாயத்திற்காக பிறந்தவன்டா நானு.. என் பின்னாடி வருபவர்கள் எல்லாருமே என் பிள்ளைகள் தான்டா என்று உருவாக்கியவர் தான் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவருடைய வழியில், இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை மட்டும் வழி நடத்தவில்லை, ஒன்றிய அரசையும் சேர்த்து வழிநடத்தக்கூடிய ஒரு தகுதியை பெற்றிருப்பவர் தான் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் என முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார்.