Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாட்ஸ்அப் மூலம் அனுப்புங்க…. அங்கு சிகிச்சை பார்க்கக்கூடாது…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

கொரோனா சிகிச்சை மையத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள் சொந்த கிளினிக் மருத்துவம் பார்க்ககூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியபோது, அரசு மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா சிகிச்சை மையத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள் வேலை முடிந்தபின் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்வதற்கு ஏழுநாட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சொந்த கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்க்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் சில அரசு மருத்துவர்கள் அவர்களுடைய சொந்த கிளினிக்குகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்களில் அவர்களுடைய சொந்த கிளினிக்கில் தனியார் அல்லது அரசு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்த்தால், அந்த கிளினிக்குகளுக்கு சீல் வைக்கப்படும் என்று உதவி கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி மருத்துவர்கள் யாரேனும் சிகிச்சை பார்த்து வந்தால் பொதுமக்கள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து 9498035000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |