Categories
தேசிய செய்திகள்

Matrimoni-மூலம் 12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…. அதிர்ச்சி….!!!!!

திருமண வரன்களை தேடுவதற்கு தற்போது ஏராளமான இணையதளங்கள் வந்து விட்டன. அதன் மூலம் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனியாக வசித்து வருபவர்கள் கூட தங்களது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆனால் இதுபோன்ற இணையதளம் மூலமாக சில தவறுகளும் நடக்கின்றன. அதில் அதிகமாக பெண்கள்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மும்பை மலாட் பகுதியை சேர்ந்த கரன் குப்தா என்ற மெக்கானிக்கல் இன்ஜினியர் திருமணதகவல் இணையதளத்தில் பல்வேறு பெயர்கள் மற்றும் முகவரிகளில் பதிவு செய்து பெண்களை தொடர்பு கொண்டு, தான் MNC நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி தனிமையில் சந்தித்துப் பேசலாம் என பெண்களை வரவழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த புகாரின் பெயரில் புனே போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |