தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ளார் அறிக்கையில், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.5 மற்றும் டீசல் விலை ரூ.4 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. ஆனால் இதுவரை டீசல் விலையை குறைக்கப்படவில்லை.
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மற்ற மாநிலங்களை விட அதிகமாக குறைக்க வேண்டும். இதையடுத்து கர்நாடக மாநிலம் பெட்ரோல் விலை ரூ.11.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் விலையை 12.85 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதனைப்போலவே மதிப்பு கூட்டு வரியை மற்ற மாநிலங்களை விட அதிக அளவில் குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் வலியுறுத்தி உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.