Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…. எம்ய்ஸ் தலைவர் தலைமையில் ஜைக்கா குழுவினர் திடீர் ஆய்வு….!!!

தென் மாநிலங்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் 15 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மூன்று வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்பானது ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் மத்திய சுகாதார சார்பில் வெளியிட்ட அறிக்கையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளின் ஜைக்கா நிறுவனம்‌ சார்பில் வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்ற முடிவடைந்து, முதல் கட்டமாக ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முன் முதலீட்டுப் பணிகள் 92% முடிந்துள்ளது.  வருகின்ற 2023 ஆம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடத்தின் வரைபட அனுமதி சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறும். இதனையடுத்து 2026 ஆம் ஆண்டு வரை கட்டிட பணிகள் நடைபெற தொடங்கிய பிறகு 2028 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் என்று அதில் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் குறித்து ஜைக்கா குழுவினர் மற்றும் மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் வி.நாகராஜன் எய்ம்ஸ் இடத்தை பார்வையிட்டார். அப்போது இயக்குனர் டாக்டர் எம்.ஹமந்த ராவிடம் எய்ம்ஸ் கட்டுமான தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

Categories

Tech |