Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. 2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் மது கடைகள் மூலம் கடந்த ஆண்டு 11% வருவாய் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஒரு புறம் அரசுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றாலும் தமிழக மக்கள் இதற்கு பெரிது வரவேற்பு தெரிவிப்பது இல்லை. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டு முக்கிய பண்டிகை காலங்களில் மது பாட்டில்களின் விற்பனை அதிகரிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகமும் இலக்கு நிர்ணயிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. அதாவது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தமிழக மக்கள் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகை நாட்களை குறி வைத்து டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டு வழக்கம்போல் டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று ரூ.200 கோடி, நாளை ரூ.200 கோடி மற்றும் தீபாவளி பண்டிகை நாட்களில் ரூ.200 கோடி என்று அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டு இருக்கும் முக்கிய அறிவிப்பு தீபாவளி மாஜாவாக கொண்டாட இருந்த குடிமகனுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகின்ற 24-ஆம் தேதி மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 23ஆம் தேதி பிற்பகல் 6 மணி முதல் 24ஆம் தேதி வரை டாஸ்மாக், மதுபான கடைகள் மற்றும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் இருக்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |