உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் டிசம்பர் 31-ஆம் இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மதுபானம் விற்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளோம் என புதுவை அரசு வாதிட்டது. இருந்தபோதிலும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைபிடிக்க மாட்டார்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரிய மனு மீது புதுச்சேரி அரசு விளக்கமளிக்க விசாரணை சற்று நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.