ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கல்வி என்பது மிக அவசியமான ஒன்று. ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளை எப்படியாவது படித்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்று வறுமையிலும் படிக்க வைத்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலருக்கு கல்வி என்பது இன்னும் எட்டாத கணியாகவே உள்ளது. அதிலும் வளர்ச்சி அடையாத மாநிலங்களில் வறுமையின் காரணமாக பலரும் கல்வி கற்காமல் இருக்கின்றன. மேலும் சில பள்ளி இடைநிற்றல் செய்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அந்த அளவிற்கு நிலைமை மோசமாக செல்லவில்லை.
இருப்பினும் இன்னும் சில மாற்று வழிகளை கொண்டு வரலாம் என்று கல்வியல் ஆர்வலர்கள் புதிய முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் அரசு பள்ளி மாணவர்களின் திறன் வளர்ப்பில் புதிய முயற்சியில் இயற்கை ஆர்வலரான பத்மப்பிரியா இறங்கியுள்ளார். விதை விதைப்போம் எனும் அறக்கட்டளை மூலமாக அரசு பள்ளி மாணவர்களுடைய திறன் வளர்ப்பில் கவனம் செலுத்தியுள்ள அவர் கூறுகையில், நியூமெரசி எங்கிலோவ் 2022 இன்னும் திட்டத்தின் மூலமாக கணிதத்தை வெறும் பாடமாக மாணவர்கள் பார்க்காமல் வாழ்க்கையோடு பொருத்தி பார்க்கும் திட்டமாக இது அமைக்கப்பட்டது.
இதில் மாணவர்கள் பயிற்சி பெறும் பொது ஒலிம்பிக் தேர்வு எழுதும் அளவிற்கு அவர்களால் தகுதி பெற முடியும். அதுமட்டுமின்றி அடுத்த கட்டமாக மாணவர்களால் நாசா வரையவும் தகுதி பெற முடியும். அதற்கான பயிற்சியை அரசு பள்ளிகளில் முதல் தொடங்கியுள்ளோம். இது கணக்கை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் பயிற்சி. புத்தகத்தை தாண்டிய கல்வி என்பது மாணவர்களுக்கு அவசியம் எனும் நோக்கத்தில் இந்த புதிய முயற்சி எடுத்து வருவதாக அறிவித்துள்ளார்இது போன்ற திட்டங்களுக்கு மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.