Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே சோகம்.. மாணவி விஷம் குடித்து தற்கொலை..!!

7ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரை சேர்ந்த பிரபுவின் மகள் பூவிகா,  அவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வீட்டில் இருந்த பூவிகா நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணீர் மல்க அச்சிறுமியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அதில் அவர் சாணிப்பவுடரை குடித்தது தெரியவந்தது, மற்றும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Categories

Tech |