இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒரு சில மாநிலங்கள் பழைய ஓய்வுதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்கள் இதற்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு வருவதற்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடி அரசு 2024 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இதனை பரிசீலிக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகிறது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் கோரிக்கையின் பேரில் பழைய ஓய் திட்டம் குறித்து சட்ட அமைச்சகத்திடம் அரசு கருத்து கேட்டது. பழைய ஓய்வு திட்டத்தை எந்த துறையிலிருந்து செயல்படுத்தலாம் என்று கேட்கப்பட்டது.
இது குறித்து அமைச்சகத்திடம் இருந்து உறுதியான பதில் ஏதும் வழங்கப்படவில்லை. இதற்கு முன்னதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பரவிய செய்தியை நீதித்துறை இணைய அமைச்சர் பகவத் கரத் மறுத்தார். மேலும் அரசு மறுத்தாலும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இந்த விவாகரத்தில் அதிக கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் கூறுகிறது. அதன்படி 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்ட அமல்படுத்த வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் இருக்கும். பணவீக்க விகிதம் அதிகரிப்புடன் அகவிலைப்படியும் அதிகரிக்கும். புதிய ஊதியக் குழுவை அமல்படுத்தும் போது ஓய்வூதியத்தையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற நன்மைகளால் தான் அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரும்புகின்றனர்.