Categories
மாநில செய்திகள்

மாதந்தோறும் இவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து இந்து சமயஅறநிலை  துறையில் அதிக திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் கோவில்களில் நடும் திட்டம், கோவில் நிலங்கள் மீட்பு, மற்றும் பட்டாச்சாரியார் உங்களுக்கு மாதம் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்ககளை நிறைவேற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கோவில்களில் முடி திருத்தும் பணியில் ஈடுபடும்  பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று பி.கே.என் அரங்கத்தில் கோவில்களில் முடி திருத்தும் பணியாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.5000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோவில் குருக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோவில்களில் மொட்டை போடும் பணியில் ஈடுபடும்  1744 பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.5000 அந்தந்த கோவில்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஒர் ஆண்டுக்கு 10.45 கோடி செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |