பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி இந்திய மாதர் சம்மேளனம் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பு இந்திய மாதர் சம்மேளத்தினர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் 33 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்ற தனி தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமயந்தி தலைமை தாங்கினார்.
மேலும் இதில் மாவட்ட தலைவர் சுலோச்சனா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் பாஸ்கரவள்ளி, தமிழ்ச்செல்வி ராஜா, கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றிய துணைத் தலைவர் வனிதா அருள் ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூபதி, விஜயா, உஷா, மீனம்பாள் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.