விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடலின் புரோமோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது .
தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .
Nanba! 😎
Ready to meet our #Master this Pongal? 🔥
Let's make it a #MasterPongal
@actorvijay @Dir_Lokesh @anirudhofficial @XBFilmCreators @Jagadishbliss @Lalit_SevenScr#100MViewsForVaathiComing pic.twitter.com/Tp9oyTbNWJ— Sony Music South (@SonyMusicSouth) January 5, 2021
இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர் . இந்நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது வாத்தி கம்மிங் பாடல் ப்ரோமோ . இணையத்தில் வெளியாகியுள்ள இந்த 10 நொடி புரோமோவில் தளபதியின் டான்ஸ் வேற லெவலில் உள்ளது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.